ஆந்திராவில் ரீரிலீஸில் கெத்து காட்டும் தமிழ் படம்!

பழைய கிளாசிக் திரைப்படங்கள், மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யும் பழக்கம், தற்போது ஆரம்பித்திருக்கிறது.

இந்த கிளாசிக் திரைப்படங்களை, முதலில் ரிலீஸ் ஆனபோது, பார்க்க தவறிய பல்வேறு ரசிகர்கள், இந்த முறை பார்த்துவிடலாம் என்ற நோக்கத்தில், திரையரங்குகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

இந்த திரைப்படங்கள் எல்லாம், தமிழ்நாட்டில் மட்டும் தான் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஆனால், தற்போது, தமிழ் திரைப்படம் ஒன்று, ஆந்திராவில், ரீரிலிஸின்போது, மாஸ் காட்டியுள்ளது.

அதாவது, விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், 400 திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஒரு தமிழ் நடிகரின் திரைப்படம், ரீ ரிலீஸில் 400 திரையரங்குகளில், வேற்று மாநிலத்தில் வெளியிட்டிருப்பது, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News