“கவனமா பேசுங்க” – உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

கடந்த சில மாதங்களுக்கு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதியின் பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இது குறித்து நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீது செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும் போது, “அமைச்சர் உதயநிதி பொதுவெளியில் பேசும்போது கவனமுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினர்.

விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளி வைத்தது. மேலும், ரிட் மனுவில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

Recent News