சிறுமியின் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஒன்றை, அலகாபாத் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அன்மையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வழங்கியிருந்தார். அதில், பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது, உடைகளை கிழிப்பது பாலியல் குற்றம் அல்ல என்று கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து, இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும், அலகாபாத் நீதிபதியின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் பதில் அளிப்பதற்கு, மத்திய அரசுக்கும், உத்தரபிரதேச அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து, உத்தரவிட்டுள்ளது.