“இதை சலுகையா எடுத்துக்காதீங்க” – செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் செந்தில் பாலாஜி. இவர், பனமோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையால் 2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒரு வருடம் சிறையிலேயே இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு தான், ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இதையடுத்து, மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, ரத்து செய்ய வேண்டும் என்று, சமீபத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், “அமைச்சராக பதவியை தொடர்வதற்கு விருப்பம் உள்ளதா” என்று, நீதிமன்றம் சார்பில், செந்தில் பாலாஜி தரப்பிடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு எந்தவொரு பதில் மனுவையும், செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யாததற்கு, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், “பதில் மனு தாக்கல் செய்யாததற்கு, நோட்டீஸ் அனுப்பாததை, சலுகையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்றும், “இன்னும் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்றும், நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News