சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்!

YouTube சேனல்களில் பேட்டி அளித்ததன் மூலம், பிரபலம் அடைந்தவர் சவுக்கு சங்கர். இவர் சமீபத்தில், பேட்டி ஒன்றை அளிக்கும்போது, பெண் காவல்துறையினர் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.

இந்த பேட்டி, பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தார். இந்த வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில், விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இடைக்கால ஜாமீன் என்பது இந்த வழக்கிற்கு மட்டும் தான் என்றும், மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தடுப்புக் காவல் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் முடிவு எடுக்கும் வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் கைதாகியிருந்தால் இந்த இடைக்கால ஜாமீன் பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News