கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி தொகுதியில், பழனிசாமி போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில், செத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, பழனிசாமி தவறாக குறிப்பிட்டிருக்கிறார் என்று, மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறையினர் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. சேலம் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். ஆனால், நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிச்சாமியின் மனு மீது 4 வாரங்களில் பதில் அளிக்க, தமிழ்நாடு அரசுக்கும், மிலானிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் கூடுதல் நடவடிக்கை எடுக்க, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.