தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துக் கொள்வது என்பது, பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், இதற்கு சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்து வருகிறது.
இதன்காரணமாக, தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியில் இருந்து, தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இன்று, இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியது.
அந்த தீர்ப்பில், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக, நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தால், சட்டத்தை உருவாக்க முடியாது.
ஆனால், அதன் சரத்துக்களை கையாள முடியும் என்றும் நீதிபதி கூறினார். தொடர்ந்து பேசிய நீதிபதி, சிறப்புத் திருமண சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கருதினால், ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.