மீடியா ஒன் சேனல் மீதான தடை ரத்து – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கேரளாவிலிருந்து செயல்பட்டு வந்த மீடியா ஒன் தொலைக்காட்சி சேனலை ‘மத்யமம்’ என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. 10 ஆண்டுகளுக்கு இந்த சேனலுக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரிமம் காலாவதியானது.

உரிமத்தை புதுப்பிக்க வேண்டி சேனல் தரப்பில் விண்ணப்பித்த போது நாட்டின் பாதுகாப்பு கருதி உரிமத்தை புதுப்பிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை பலரும் எதிர்த்தனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்நிலையில் மீடியா ஒன் சேனலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

RELATED ARTICLES

Recent News