“DRS-னா Dhoni Review System-னு தான் நானும் நினைச்சிட்டு இருந்தேன்” – ஆச்சரியப்பட வைத்த சுரேஷ் ரெய்னா!

முந்தைய கால கிரிக்கெட் போட்டிகளில், நடுவர் அவுட் என்ற அறிவித்துவிட்டால், பேட்ஸ்மேனும், அவுட் இல்லை என்று கூறிவிட்டால் பந்து வீச்சாளரும், அமைதியாக சென்றுவிட வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவித்து, எதுவும் பேசவே கூடாது. ஆனால், தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட காரணத்தால், DRS என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதாவது, நடுவர் அவுட் என்று அறிவித்தாலும், அந்த முடிவில் பந்து வீச்சாளர் அல்லது பேட்ஸ்மேனுக்கு சந்தேகம் இருந்தால், அவர் DRS முறையை நாடி, தொழில்நுட்பங்கள் உதவியுடன், அது அவுட்-ஆ இல்லையா? என்பதை கண்டறிய முடியும். இந்த DRS என்ற சொல், Decission Review System என்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஆனால், தல தோனியின் ரசிகர்கள், Dhoni Review System என்று கூறுவார்கள்.

அதற்கு காரணம் என்னவென்றால், தோனி ஒரு முறை DRS முறையை தேர்வு செய்துவிட்டால், அது சரியாக தான் இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், DRS முறையை Dhoni Review System என்று தான் ரசிகர்கள் அழைக்கிறார்கள் என்பது தோனிக்கு தெரியும் என்று தெரிவித்தார். நானும் அது Dhoni Review System என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அதன் பிறகு, அதன் உண்மையான விரிவாக்கம் எனக்கு தெரிந்தது என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மேலும், தோனி எப்போதும் கடைசி நிமிடங்களில் தான் DRS-க்கான முடிவை எடுப்பார் என்று தெரிவித்தார். பந்து வீச்சாளர்கள் எப்போதும் அவுட் என்று தான் நினைப்பார்கள். ஆனால், அந்த 3 ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருப்பது தோனி. அது அவுட்டா இல்லையா என்பது அவருக்கு தான் தெரியும், எனவே அவர் தான் சிறந்த முடிவை எடுப்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News