சினிமா
கோலிவுட்டை தெரிக்கவிடும் சூரி..! அடுத்தடுத்து குவியும் படவாய்ப்புகள்..!
சிறுசிறு வேடங்களில் நடித்து, பின்னர் கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமானார். இந்த நிலையில் இவரது நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள, விடுதலை படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் சூரியின் நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்தது.
இதே நேரத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதை தொடர்ந்து மதயானை கூட்டம் இயக்குனர் சூரியிடம் ஒரு கதை கூறியிள்ளார். இந்த கதை பிடித்து போனதால், இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதேபோன்று அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதால், இனிமேல் நடிகர் சூரியை காமெடியனாக பார்க்க முடியாது என தெரிகிறது.
You must be logged in to post a comment Login