சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42. பாலிவுட் நடிகைகள் திஷா பதானி, மிருணாள் தாகூர் ஆகியோர் அறிமுகமாகும் இந்த படத்தின், அப்டேட்டுகள் ஏதும் வெளியாகாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் சூர்யா 42 திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே வசூல் வேட்டை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி டிஜிட்டல், சட்டிலைட், இசை மற்றும் தியேட்டர்களின் உரிமங்கள் ரூ. 500 கோடிவரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே வேலையில் விஜய்யின் லியோ திரைப்படம் ரூ.400 கோடி மட்டுமே விற்பனையாகியது. ஆகவே லியோ படத்தின் வசூல் சாதனையை, சூர்யா 42 அடித்து நொறுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.