லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில், ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில், நடிகா் சூர்யா நடித்து அசத்தியிருப்பார்.
இந்த கதாபாத்திரம் பெருமளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அந்த கதாபாத்திரத்தில், சூர்யாவின் மேக்கப் மற்றும் உடைகள், ஹேர் ஸ்டைல் என்று அனைத்தும் செம மாஸாக இருக்கும். இந்த கேரக்டருக்கான அனைத்தையும், செரினா என்ற மேக்கப் கலைஞர் தான் வடிவமைத்திருந்தார்.
இந்நிலையில், சூர்யாவின் 42 படத்திலும், ரோலக்ஸ் மாதிரியான மாஸான கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. அந்த கதாபாத்திரத்திற்கும், செரினா தான் மேக்கப் போட உள்ளாராம். இதன்மூலம், ரோலக்ஸ் மாதிரியான இன்னொரு மாஸான கதாபாத்திரத்தில் சூர்யாவை பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.