ரெட்ரோ படத்திற்கு பிறகு தனது 45-வது படத்தில், நடிகர் சூர்யா நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இந்த படத்தை, ட்ரீம் வாரியர் நிறுவனம் தான் தயாரித்துள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூர்யா 45 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, தற்போது முடிவடைந்துள்ளதாம்.
மேலும், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு, வரும் 20-ஆம் தேதி அன்று, சென்னையில் நடைபெற உள்ளதாம். 2-ஆம் கட்ட படப்பிடிப்புக்காக நீதிமன்ற செட் அமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறதாம்.