ரெட்ரோ படத்திற்கு பிறகு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில், சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தில், சூர்யாவுடன் சேர்ந்து, நடிகை த்ரிஷா, நட்டி நட்ராஜ், ஸ்வாசிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
கட்சி சேர பாடல் மூலம் பிரபலமான, சாய் அபயங்கர் என்பவர் தான், இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் தொடர்பான தகவல், தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்திற்கு பேட்டைக்காரன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம்.