பாலாவை திட்டிக் கொண்டே இருந்த சூர்யா? என்ன தான் ஆச்சு?

சமீபத்தில் தொடங்கப்பட்ட வணங்கான் திரைப்படம், தற்போது கைவிடப்பட்டுள்ளது. சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட உரசல் காரணமாகவே, இந்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக, பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, வணங்கான் படப்பிடிப்பின்போது, உதவி இயக்குநரை சூர்யா கடுமையாக திட்டுவாராம்.

பாலாவின் காதில் கேட்கவேண்டும் என்றே மோசமாக திட்டுவாராம். பாலாவை நேரடியாக திட்ட முடியாத கோபத்தை தான் அவர் இவ்வாறு காட்டுகிறார் என்று செட்டில் பலர் பேசிக்கொண்டதாகவும் தகவல் பரவி வருகிறது.