இணைந்து நடிக்கும் சூர்யா – விக்ரம்! இயக்குநர் இவர் தான்!

நடிகர் சூர்யாவும், விக்ரமும், பிதாமகன் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால், அதன்பிறகு, இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு, அவர்களுக்கு அமையவே இல்லை.

இந்நிலையில், சூர்யாவும், விக்ரமும், புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.

அதாவது, கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு, வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஷங்கர் இயங்கியிருக்கிறார். முதலில், இந்த திரைப்படத்தில், ரன்வீர் சிங்கை நடிக்க வைக்கலாம் என்று ஷங்கர் முடிவு செய்திருந்தாராம்.

ஆனால், தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ள அவர், தமிழ் நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இந்த நாவலில், இரண்டு முதன்மை கதாபாத்திரங்கள் இருப்பதால், இந்த இரண்டில், நடிகர் சூர்யாவையும், விக்ரமையும் நடிக்க வைப்பதற்கு, அவர் முடிவு செய்துள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News