சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், மிகப்பெரிய தோல்வியை பெற்றது.
இந்த வருடம் ரிலீஸ் ஆன படங்களிலேயே, மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படமாக இதுதான் பார்க்கப்படுகிறது. இதனால், அந்த படத்தை தயாரித்த ஞானவேல் ராஜாவுக்கு, மீண்டும் ஒரு படத்தை நடித்துக் கொடுப்பதற்கு, சூர்யா முன்வந்துள்ளாராம்.
இதற்கான பேச்சுவார்த்தையும், கதையை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறதாம். இயக்குநர் யார் என்பது, தற்போது வரை தேர்வு செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது, ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்த பிறகு, ஞானவேல் ராஜாவின் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.