சினிமா
11 வருடங்கள் கழித்து சூர்யாவுடன் கூட்டணி வைக்கும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர்!
தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான தர்பார் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனால், அடுத்து பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில், ஆர்வமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சூர்யாவும், ஏ.ஆர்.முருகதாஸ்-ம், 11 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரது கூட்டணியில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படமும், 2011-ஆம் ஆண்டு வெளியான 7-ஆம் அறிவு திரைப்படமும், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதன்காரணமாக, இவர்களது கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இது கஜினி படத்தின் 2-ஆம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுவதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
