தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர்கள் சூர்யா ஜோதிகா தம்பதியினர். இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர். நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி நடிப்பது மட்டுமில்லாமல் 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்ரனர். இது தவிர மும்பையில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்கு சுமார் 70 கோடி மதிப்பீட்டில், 9000 சதுரடியில் மிகப்பெரிய அபார்ட்மேண்டை வாங்கியுள்ளதாகவும், விரைவில் குடியேறப்போவதாகவும் கூறப்படுகிறது. மும்பை நடிகை ஜோதிகாவின் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.