படத்திற்கு படம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா, கதாபாத்திரதிற்காகவே தன்னை முழுவதும் மாற்றிக்கொண்டு நடிப்பார். இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்திற்காகவும் கடுமையான ஒர்கவுட் செய்து மிகவும் ஃபிட்டாக மாறியிருப்பார்.
தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் சூர்யா தனது சிக்ஸ் பேக்ஸை காட்டுவது போன்று எடுக்கப்பட்டுள்ளது.
கங்குவா படத்திற்காக சூர்யா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை கடந்த மே மாதமே படக்குழு வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.