பாட்ஷா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் ஹேமலதா. அந்த படத்திற்கு பிறகு, பூவே உனக்காக, சூர்ய வம்சம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.
பெரிய பெண்ணாக மாறிய பிறகு, சித்தி, கனா காணும் காலங்கள் ஆகிய பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு, திருமணம் செய்துக் கொண்ட இவர், நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.
தற்போது, கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, வைரலாக பரவி வருகிறது.
