சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா என்ற படத்தில், நடிகர் சூர்யா நடித்து முடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில், தற்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு, தூம் படத்தின் 4-ஆம் பாகத்தில், அவர் வில்லனாக நடிக்க உள்ளாராம். இதுதொடர்பாக, நடிகர் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இது உறுதி செய்யப்பட்டால், நடிகர் சூர்யாவின் மார்கெட், இந்தி சினிமாவில் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.