சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா.
பெரும் பொருட்செலவில், 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில், நடிகர் சூர்யா, உண்மையான புலியுடன் சண்டை போடுவது போன்ற காட்சி எடுக்கப்பட உள்ளதாம்.
அதற்காக, நிஜ புலியுடன் எப்படி நடிப்பது என்று, சூர்யா பயிற்சி எடுத்து வருகிறாராம். இந்த தகவல், பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.