சிவா இயக்கத்தில் உருவான கங்குவா என்ற திரைப்படத்தில், சூர்யா கடைசியாக நடித்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்றது.
மேலும், இந்த ஆண்டின் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுத்திய படமாகவும் பார்க்கப்பட்டது. இதனால், இந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கு, இயக்குநர்களை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார்.
இந்நிலையில், லக்கி பாஸ்கர் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரியுடன், சூர்யா கூட்டணி வைக்க உள்ளாராம். இதுதொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை உற்சாகம் ஆக்கியுள்ளது.