சூர்யா எப்படி உள்ளார்? தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!

நடிகர் சூர்யா, தற்போது தனது 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஊட்டியில் நடைபெற்று வந்தது.

அங்கு, ஆக்ஷன் காட்சியை படமாக்கியபோது, நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் உடல்நலம் தற்போது எவ்வாறு உள்ளது என்று, 2டி நிறுவன தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, சூர்யாவுக்கு ஏற்பட்டது சிறிய காயம் தான் என்றும், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News