சூர்யா நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன கங்குவா திரைப்படம், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பிறகு, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ என்ற படத்தில், சூர்யா நடித்துள்ளார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் மே 1-ஆம் தேதி அன்று, இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.