சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் – பாலிவுட்டில் பரபரப்பு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவருடைய மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுஷாந்த் சிங் மரணமடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்த்துக்கு உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.

சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது “சுஷாந்த் உடலில் நிறைய மார்க்குகள் இருந்தன. குறிப்பாக அவரது கழுத்தில் 2 முதல் 3 மார்க்குகள் இருந்தன. இதனைப் பார்த்தபோது என் உயர் அதிகாரிக்கு இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினேன்.ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போட்டோ மட்டும் எடு என சொன்னார்கள். பின்னர் உடலை போலீஸிடம் ஒப்படைத்தோம்” என அவர் கூறினார்.

தற்போது சுஷாந்த் சிங் மரணம் குறித்த விவாதம் பாலிவுட்டில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.