தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுஷ்மிதா சென்.
கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது தாலி என்ற வெப் தொடர் மூலமாக, கம்பேக் கொடுத்துள்ளார்.
இதில், திருநங்கை வேடத்திலும் அவர் நடித்து, ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளார். இந்த வெப் தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
தேசிய விருது வென்ற ரவி ஜாதவ் இயக்கும் இந்த வெப் தொடர், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.