சவுக்கு சங்கரின் தண்டணை நிறுத்தி வைப்பு..!

சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனம் செய்து வந்தவர் சவுக்கு சங்கர். யூட்யூப் சேனல் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இவர், உயர் நீதி மன்றம் முழுவது ஊழல் கறை படிந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பான வழக்கில் செப்டம்பர் 15-அன்று 6- மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார், தற்போது அமர்வுக்கு வந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதுவும் பேசக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.