எம்.பி.க்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை: டிடிவி தினகரன்!

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

தஞ்சாவூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. இவ்வாறு கூறினார்.

RELATED ARTICLES

Recent News