நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலையின் நடை பயணம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் சொல்ல முடியாது. விஜய் அரசியலுக்கு வந்தால் நமக்கு ஓட்டு பாதிக்கப்படுமே, நமக்கு பிரச்சனை வருமே என்று நினைப்பவர்கள் மட்டுமே விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்பார்ப்பார்கள் எனவும் கூறினார்.
அண்ணாமலைக்கு சுகர் இருக்குமோ என்று தெரியவில்லை, தினமும் நடக்க வேண்டுமென டாக்டர் கூறி இருக்கலாம். அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த வித பிரயோஜனமும் இல்லை என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமர் மோடி இந்தியாவில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெற்றாலும் வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்துள்ளார்.