பாஜக பிரமுகர் எஸ்.வி சேகர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆரம்பத்தில் மறைமுகமாக விமர்சித்து வந்த எஸ்.வி சேகர் தற்போது நேரடியாகவே விமர்சித்து வருகிறார்.
தற்போது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பாஜக பிரமுகர் அண்ணாமலையின் நடை பயணத்தை விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறியதாவது : அண்ணாமலையின் நடைபயனத்தால் அண்ணாமலைக்கு லாபம். பாஜகவுக்கு நஷ்டம் என விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவுக்கு ஒரு சீட்டுகூட கிடைக்காது. அதிமுகவின் ஒரு வாக்குக்கூட பாஜகவுக்கு கிடைக்காது என அவர் பேசினார்.