Connect with us

Raj News Tamil

10 ஓட்டு கூட வாங்க முடியாது…அண்ணாமலையை பங்கமாய் கலாய்த்த எஸ்.வி சேகர்

அரசியல்

10 ஓட்டு கூட வாங்க முடியாது…அண்ணாமலையை பங்கமாய் கலாய்த்த எஸ்.வி சேகர்

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை சாடியுள்ளார்.. இந்த விவாகரத்தில் அண்ணாமலையை நடிகர் எஸ்வி சேகர் பங்கமாய் கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.

தென் மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து கொண்டிருந்த சமயத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார். வெள்ளம் பாதித்த இடங்களை மத்தியக்குழு ஆய்வு செய்துவிட்டு சென்ற பின்னரே, மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சென்று வந்தார். தமிழக மக்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அக்கறையேயே கிடையாது என குற்றம் சாட்டினார்.

அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் , பதிவிட்டிருந்த எஸ்வி சேகர், ” இதே அரசியலைத்தானே இங்க இந்த அசட்டு Ex IPS பண்றீங்க. தினசரி மாநில அரசை குறை சொல்றதை தவிர மக்கள் நலனுக்கு சொந்த காசு 10 பைசா செலவு பண்ணியிருக்கீங்களா. இந்த கத்துக்குட்டி அரசியலால 10 ஓட்டு கூட வாங்க முடியாது. மே மாதம் வரை காத்திருங்கள். மே மேன்னு கதறினாலும் ஒரு பிரயோஜமிருக்காது.” என்று கூறியுள்ளார்.

More in அரசியல்

To Top