ஜப்பான நாட்டை சேர்ந்த ஜீரோமோன் கிமுரா என்பவர், 116 வயதை கடந்து, உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்த நபர் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருந்தார். அவர் உயிரிழந்து 9 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் வசித்து வரும் சிவானந்தா என்பவர், அந்த சாதனையை முறியடித்துள்ளார். 126 வயதுடைய இவர், யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதுவரை உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும் இவர், கின்னஸ் ரெக்கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். தனது நீண்ட ஆயுளுக்கான காரணம் குறித்து பேசிய அவர், சாதாரண உணவுகளை மட்டும் தான் சாப்பிடுகிறேன் என்றும், பால் பழங்களை சாப்பிடுவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், செக்ஸ் வைத்துக் கொள்ளாததும், எண்ணெயில் வறுத்த பொருட்களை உண்ணாததும் தான் எனது நீண்ட ஆயுளுக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது தான் சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.