என்ன தான் பீட்சா, பர்கர், சேன்ட்விச் என்று பல்வேறு கவர்ச்சியான உணவு வகைகள் இருந்தாலும், இட்லியின் ருசியே தனிதான். இதுமட்டுமின்றி, மேற்குறிப்பிட்ட உணவுகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. ஆனால், உடல்நலத்திற்கு சிறந்த உணவாக இட்லி பார்க்கப்படுகிறது.
இவ்வளவு சிறப்புகளை கொண்ட இட்லி, உலகம் முழுவதும் உள்ள, பல்வேறு நாட்டு மக்களால் விரும்பி உண்ணப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30-ஆம் தேதி அன்று “உலக இட்லி தினம்” கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “கடந்த ஒரு வருடத்தில், ஐதராபாத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், ரூபாய் 6 லட்சத்திற்கு இட்லியை மட்டுமே ஆர்டர் செய்துள்ளார்” என்ற ருசிகர தகவலை ஸ்விகி தெரிவித்துள்ளது. மேலும், “பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மும்பை மற்றும் கோவை என ஸ்விகியில் இட்லி ஆர்டர் செய்வதில் இந்த நகரங்கள் டாப் 5 இடங்களில் உள்ளன.” என்றும், அந்த பதிவில் ஸ்விகி தெரிவித்துள்ளது.