Connect with us

Raj News Tamil

“அஜித் படத்தை மிஸ் பண்ணிட்டேன்” – டிஜிபி சைலேந்திரபாபு!

சினிமா

“அஜித் படத்தை மிஸ் பண்ணிட்டேன்” – டிஜிபி சைலேந்திரபாபு!

தமிழகத்தின் காவல்துறை தலைவராக செயல்பட்டு வந்தவர் சைலேந்திரபாபு. சமீபத்தில், ஓய்வு பெற்ற இவர், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், உங்களுக்கு பிடித்த சினிமா நடிகர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு, சைலேந்திரபாபு அளித்த பதில் பின்வருமாறு:-

“நான் சிறு வயதாக இருந்தபோது, சிவாஜி நடித்த தங்கப் பதக்கம் படத்தை ரசித்து பார்த்தேன். அதன்பிறகு, சத்யராஜ் நடிப்பில் வெளியான கடமை கன்னியம் கட்டுப்பாடு என்ற படத்தை பார்த்து ரசித்தேன்.

இதற்கிடையே, இதுதாண்டா போலீஸ் என்ற படத்தை பார்த்துள்ளேன். விக்ரமின் சாமி படமும், சூர்யாவின் காக்க காக்க படமும், எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இதுவரை அஜித்தின் ஒரு படத்தை கூட நான் பார்த்ததில்லை.

அவரிடம் நான் பேசியிருக்கிறேன். ஆனால், அவர் படங்கள் ஒன்றை கூட நான் பார்த்ததேயில்லை. விஜய் படங்களை கூட, ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அனைவரும் பெருமளவில் பாராட்டியுள்ள திரைப்படத்தை மட்டும் தான், நான் தேடி தேடி பார்ப்பேன்.

அனைத்து தரப்பினரும், பாராட்டினால், மட்டுமே பார்ப்பேன். ஒரு வருடத்திற்கு, 2 அல்லது 3 படங்கள் மட்டுமே பார்ப்பேன். சில வருடங்களில், ஒரு படங்கள் கூட பார்க்காமல் இருந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top