Connect with us

Raj News Tamil

சிரியாவில் முதன்முறையாக பெண்ணுக்கு கண்டறியப்பட்ட லுகேமியா புற்றுநோய்!

உலகம்

சிரியாவில் முதன்முறையாக பெண்ணுக்கு கண்டறியப்பட்ட லுகேமியா புற்றுநோய்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரில், சிரியாவை சேர்ந்த பெற்றோருக்கு மகளாக, 1975-ஆம் ஆண்டு பிறந்தவர் அஸ்மா அல்-அசாத். 48 வயதாகும் இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அந்த பாதிப்பில் இருந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு முழுவதுமாக குணமாகியிருந்தார். இந்நிலையில், இவருக்கு லுகேமியா என்ற புற்றுநோய் ஏற்பட்டிருப்பது, தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட சிரியா அதிபர் அலுவலகம், “பல்வேறு மருத்துவ அறிகுறிகளுக்கு பிறகு, தொடர் மருத்துவ பரிசோதனைகளைத் தொடர்ந்து, அஸ்மா அல்-அசாத்-க்கு, கடுமையான லுகேமியா புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறப்பு சிகிச்சைக்கு அஸ்மா செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளது.

மேலும், சிரியாவில் உள்ள பெண்களில், இவருக்கு தான் முதன்முதலில் லுகேமியா புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லுகேமியா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள ரத்த வெள்ளை அனுக்களின் அளவு அதிகரிக்கும்போது, எலும்பு மஜ்ஜைகளில் உருவாகும் புற்றுநோய் தான் லுகேமியா என்று அழைக்கப்படுகிறது.

More in உலகம்

To Top