வெஸ்ட் இண்டீசின் பார்படாசில் (பிரிட்ஜ்டவுன்) உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் நிலைத்து ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் குவித்து அசத்தினர்.
ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை பொறுத்தவரை ரஷித் கான் 3 விக்கெட்டுகள், ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்டுகள், நவீன் உல் ஹக் 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
குல்பதின் நைப் 17 ரன்கள், அஸ்மத்துல்லா 26 ரன்கள், நஜிபுல்லா ஜடரன் 19 ரன்கள் என ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும், அவர்களால் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியவில்லை.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் வெற்றியை பெற்றது. அடுத்த சுற்றில் இந்திய அணி வங்கதேச அணியுடன் மோத உள்ளது.