10 ரூபாய்க்கு டீ சர்ட் விற்பனை : கூட்டம் அலை மோதியதால் போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் கடைவீதி கன்னையா தெருவில் புதிதாக துணிக்கடை திறக்கப்படுவதற்கு அறிமுக சலுகை ஆக பத்து ரூபாய் சீட் டீசர்ட் வழங்குவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு இன்று ஒரு நாள் 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் வாங்குவதற்காக கடையின் முன்பு அதிகாலை முதலே இளைஞர்கள் கூடியதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கடையானது 9 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில் 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் வாங்குவதற்காக பலரும் கூட்ட நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர்.

தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கவே அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களை சாலைகளில் நிறுத்தி விட்டு சென்றனர். 200 மேற்பட்டோர் அதிகமாக கூடியதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.