இந்திய கிரிக்கெட் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இதில், முதல் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீடு மைதானத்தில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
இதேபோன்று, தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீசா ஹென்ரிக்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் 27 ‘டி-20’ல் மோதின. இதில் இந்தியா 15ல் வென்றது. 11ல் தோற்றது. 1 போட்டி மழையால் ரத்தானது.
கடைசியாக இரு அணிகள் மோதிய 5 போட்டியில் இந்தியா, 4ல் வென்றது (1 தோல்வி).