T20 உலகக் கோப்பை; உறுதி செய்யப்பட்ட 20 அணிகள்!

2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கரீபியன் தீவுகளில் ஏழு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்துகின்றன. 2024 ஜுன் 4 முதல் 30 வரை டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இவற்றுள் 19 நாடுகள் தங்களது இடத்தை உறுதி செய்திருந்த நிலையில், இந்தப் பட்டியலில் உகாண்டா அணியும் இன்று இணைந்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆப்பிரிக்கா, நமீபியா, உகாண்டா அமெரிக்கா, கனடா ஆசியா, நேபாளம், ஓமன் கிழக்கு ஆசிய பசிபிக், பப்புவா நியூ கினியா ஐரோப்பா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 20 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவுகளாக விளையாடவுள்ளன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெரும். சூப்பர் 8 சுற்றில் மீண்டும் 8 அணிகள் 2 பிரிவுகளாக விளையாடும். இதில் 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

RELATED ARTICLES

Recent News