Connect with us

Raj News Tamil

T20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது ஆப்கானிஸ்தான்; வெளியேறியது நியூஸிலாந்து!

விளையாட்டு

T20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது ஆப்கானிஸ்தான்; வெளியேறியது நியூஸிலாந்து!

ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் 29-வது ஆட்டம் ஆப்கானிஸ்தான் – பப்புவா நியூ கினியா அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், பப்புவா நியூ கினியா முதலில் பேட் செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கிப்ளின் டோரிகா 27 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இதற்கு முன்னர் குரூப் சி பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று “சூப்பர் 8” சுற்றுக்கு முன்னேறியது. இந்த பிரிவில் உள்ள நியூஸிலாந்து அணி தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்து டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top