உலகக் கோப்பை போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது அமெரிக்கா.
இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 6) இரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்கா, பந்துவீசியது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் 44 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது. அணித்தலைவர் மோனக் படேல் 38 பந்தில் 50 ரன்களும், ஆரோன் ஜோன்ஸ் 26 பந்தில் 36 ரன்களும் விளாசினர்.
அந்த அணியின் நிதிஷ் குமார் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க, போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
அமெரிக்க அணி முதலில் துடுப்பாடி ஒரு விக்கெட்டு 18 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 12 ரன்கள் எடுத்தது.
இதனால் அந்த அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் அமெரிக்கா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.