T20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!

நியூயார்க்கில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று தனது முதல் போட்டி அயர்லாந்து அணியுடன் மோதின.

இந்த போட்யில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் பேட் செய்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் அயர்லாந்து அணியை 96 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தனர்.

இந்திய தரப்பில் ஹர்திக் பாண்டியா 3, ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 முகமது சிராஜ், அக்ஸர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினார். இந்த ஜோடியில் விராட் கோலி 1 ரன்னில் கேட்ச் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக ரோகித் சர்மாவுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா, 36 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.

இதனிடையே டி20 தொடரில் தனது 4 ஆயிரம் ரன்களையும் ரோகித் சர்மா கடந்தார். அதன்பிறகு காயம் காரணமாக ரோகித் சர்மா பெவிலியன் திரும்பினார்.

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்த ரிஷப் பண்ட் 36 (26) ரன்களும், ஷிவம் துபே (2) ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடைர், பென் வைட் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

RELATED ARTICLES

Recent News