Connect with us

Raj News Tamil

டி20 உலக கோப்பை: இந்திய அணி சாம்பியன்!

விளையாட்டு

டி20 உலக கோப்பை: இந்திய அணி சாம்பியன்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா 9 ரன்களில் மகாராஜா பந்தில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் (0) மற்றும் சூர்யகுமார் யாதவ் (3) என சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

பின்னர் களத்தில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் அக்சர் படேல் இந்திய அணியை தடுமாற்றத்தில் இருந்து மீட்டெடுத்தனர்.

ஆரம்பம் முதலே பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி மொத்தம் 76 ரன்கள் குவித்தார். 58 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி அவுட்டானார்.

அவரை தொடர்ந்து சிவம் தூபே 27 ரன்களும், பாண்டியா 5 ரன்களும் குவித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்துள்ளது.

177 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டி-காக் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்களும், கேப்டன் ஐடன் மார்க்ராம் 4 ரன்களும் வெளியேறி தென்னாப்பிரிக்க அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் ஹென்ரிச் கிளாசென் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19 வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் வெறும் 4 ஓட்டங்கள் விட்டு கொடுத்து போட்டியை இந்திய அணியின் பக்கம் திருப்பினார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாண்டியா கடைசி ஓவரை வீசினார்.

பாண்டியா வீசிய 20 வது ஓவரின் முதல் பந்தை டேவிட் மில்லர் சிக்சர் எல்லைக்கு தூக்கி அடிக்கவே, அதை சூர்யகுமார் யாதவ் மிக திறமையாக கேட்ச் பிடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி T20 உலக கோப்பை தட்டித் தூக்கி சாதனை படைத்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top