டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் – சி’ ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பவுல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நியூஸிலாந்து அணி களமிறங்கியது.
ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
கேப்டன் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் 84 ரன்களில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்றுள்ள முதல் வெற்றியாக அமைந்துள்ளது.