Connect with us

Raj News Tamil

T20 உலகக்கோப்பை: வெற்றியுடன் தொடங்கியது அமெரிக்கா!

விளையாட்டு

T20 உலகக்கோப்பை: வெற்றியுடன் தொடங்கியது அமெரிக்கா!

டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி பெற்றது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்கியது.

முதல் ஆட்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், கனடா பேட்டிங் செய்தது.

முதலில் களமிறங்கிய கனடா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க 17.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அமெரிக்க அணி வீரர் ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்கள் விளாசி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top