வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவா் நடிகை டாப்சி. தமிழ் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்து வரும் இவர், உடற்பயிற்சி செய்வதிலும் ஆர்வம் உள்ளவர்.
இந்நிலையில், நடிகை டாப்சி தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிக்ஸ் வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகர்களை அசரவைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
