Connect with us

Raj News Tamil

Dune Series-ல் நடிக்கும் அஜித் பட ஹீரோயின்!

சினிமா

Dune Series-ல் நடிக்கும் அஜித் பட ஹீரோயின்!

கடந்த 2021-ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் Dune. டெனிஸ் வெல்லனுவே என்ற கனடிய இயக்குநர் இயக்கியிருந்த இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்களின் பிந்தைய நிகழ்வுகளை மையப்படுத்தி, Dune: Prophecy என்ற வெப் தொடர் உருவாக உள்ளது.

இந்த தொடரில், பாலிவுட் நடிகை தபு, சிஸ்டர் பிரான்செஸ்கா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த கதாபாத்திரம், மிகவும் வலிமையான, புத்திசாலித்தனமான, வசீகரிக்கும் தன்மை கொண்டதாக, காட்சிப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த சினிமா ரசிகர்கள், நடிகை தபு-வுக்கு தங்களது பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top