‘மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததாலும், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலைமுதல் பல்வேறு முக்கிய சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், தற்போது போக்குவரத்து சீராகியுள்ளது.
விமான நிலையம் முதல் அண்ணா சாலை வரையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் தடையற்ற போக்குவரத்து உள்ளது.
புழல் ஏரி நீர் திறப்பால் மஞ்சம்பாக்கம் – வடபெரும்பாம்பாக்கம் இடையே போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
- கணேசபுரம் சுரங்கப்பாதை
- செம்பியம் சுரங்கப்பாதை
- வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
- துரைசாமி சுரங்கப்பாதை
- ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
- சைதாப்பேட்டை – அரங்கநாதன் சுரங்கப்பாதை
- சி.பி. சாலை சுரங்கப்பாதை
- வியாசர்பாடி சுரங்கப்பாதை
- திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை
- சூளைமேடு லயோலா சுரங்கப்பாதை
- கதிர்வேடு சுரங்கப்பாதை
ஆகிய சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.